‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ”ஈரமான ரோஜாவே”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் ராஜ்குமார் நாயகனாக நடிக்க நாயகியாக பவித்ரா நடித்திருந்தார். தற்போது பவித்ரா ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து, ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சீரியலில் நாயகியாக பிக்பாஸ் பிரபலமான கேப்ரியலா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.