ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லிக்கு வருவதால் சிறப்பு வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
டெல்லியில் இன்று இந்தியா மற்றும் ரஷ்யாவின் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க அதிபர் விளாடிமிர் புடின் மாஸ்கோவிலிருந்து டெல்லிக்கு வருகிறார். அவர் விமான நிலையத்தில் இருந்து, உச்சி மாநாடு நடக்கும் ஐதராபாத் இல்லத்திற்கு சென்றதும், அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளிக்கிறார்.
அதன்பின்பு, இருநாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு உயர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு, தலைவர்கள் இருவரும் தனியாக சந்தித்து பேசுகிறார்கள். உச்சி மாநாட்டின் இறுதியில், இரண்டு நாடுகளின் பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம் உட்பட 10 ஒப்பந்தங்களை கையெழுத்திடயிருக்கிறார்கள்.