சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முத்துவாஞ்சேரி பகுதியில் வசிக்கும் சந்தானம் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தானத்தை கைது செய்ததோடு, அவரிடமிருந்து 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.