சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்து விட்டனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அதன்படி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை சிறை அலுவலர்கள் வழங்கியுள்ளனர்.