நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 14 போட்டிகளில் வென்றுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது .இதில் முதல் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதோடு 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ந்து 14 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது .
அதேபோல் விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி 66 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார் .இதில் 39 போட்டிகளில் வெற்றியும் , 16 போட்டிகளில் தோல்வியும் , 11 போட்டி டிராவில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.