Categories
உலக செய்திகள்

“உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட இலங்கையர்!”…. காப்பாற்ற முயன்றவருக்கு கிடைத்த பெருமை… பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு…!!

பாகிஸ்தானில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரை காப்பாற்ற முயற்சித்த நபருக்கு நாட்டின் உயரிய விருது வழங்கப்படும் என்று பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட் மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பிரியந்தா என்ற இலங்கையைச் சேர்ந்த நபர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரை அங்கிருந்து சக பணியாளர்கள் கடுமையாக தாக்கி, உயிருடன் எரித்துக் கொன்றனர். இந்நிலையில், அந்த சம்பவத்தின் போது, ஒரு நபர் பிரியந்தாவை அவர்களிடமிருந்து காப்பாற்ற முயற்சித்த வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் வெளியானது.

அதன்பின்பு, அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான், தன் ட்விட்டர் பக்கத்தில், சியோல்காட் மாகாணத்தில் நடந்த சம்பவத்தில், பிரியந்தாவை காப்பாற்ற முயற்சித்த, மாலிக்கின் துணிச்சலான செயலை பாராட்டுகிறேன்.

நம் தேசத்தின் சார்பில் அவருக்கு சல்யூட்! Tamgha i Shujaat  என்ற நாட்டின் மிக உயர்ந்த விருது அவருக்கு வழங்கப்படும் என்று பதிவிட்டிருக்கிறார்.

Categories

Tech |