பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் விலகியுள்ளார் .
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.இப்போட்டி வருகின்ற டிசம்பர் 13ம் தேதி முதல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார் .
இதனால் அவருக்கு பதிலாக ஒருநாள் மற்றும் டி20 அணியில் டெவன் தாமஸ், ரோவ்மேன் பவல் ஆகியோர் விளையாடுகின்றனர் .இதை =தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக ஷாய் ஹோப்பும் ,டி20 போட்டிக்கு கேப்டனாக நிக்கோலஸ் பூரனும் செயல்படுகின்றன .
வெஸ்ட் இண்டீஸ் அணி :
ஒருநாள் தொடர் : ஷாய் ஹோப் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்), டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், அகேல் ஹோசைன், அல்ஸாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி, ஆண்டர்சன் பிலிப், ரேமன் ரீஃபர், ரொமாரியோ தாமஸ், ஒடியன் தாமஸ், ஓடன் ஸ்மிபர்ட் மற்றும் ஹேடன் வால்ஷ் ஜூனியர்.
டி20 தொடர் : நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணை கேப்டன்), டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், டொமினிக் டிரேக்ஸ், அகேல் ஹொசைன், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ரோவ்மேன் பவல், ஒடியன் தாமஸ், ஒடியன் ஷெப்பர்ட், மற்றும் ஹேடன் வால்ஷ் ஜூனியர்