Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில்…. ரூ.4 லட்சம் கிடைக்கும்…. இணைவது எப்படி…??

நாட்டு மக்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விபத்து மற்றும் இறப்பு காலத்தில் உதவும் விதமாக விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டு திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின் மூலமாக 4 லட்சம் வரை பெற முடியும். விபத்து காப்பீட்டின் இணைவது மூலம் ஆண்டுக்கு ரூபாய் 12 செலுத்த வேண்டும். இதன்மூலம் விபத்து நேரிட்டால் ரூபாய் 2 லட்சம் வரை பெற முடியும்.

அதாவது விபத்து என்பது சாலை விபத்து  மட்டும் கிடையாது. பாம்பு கடித்திருந்தாலும், படியிலிருந்து இருந்து தவறி விழுந்தாலும் விபத்து தான். எந்தவொரு விபத்திற்கு இழப்பீடு கிடைக்கும். காப்பெடு தொடங்கிய முதல் ஆண்டில் மட்டும் தற்கொலை ஏற்றுக்கொள்ள மாட்டாது. ஆயுள்காப்பீடு வருடத்திற்கு ரூபாய் 330 செலுத்த வேண்டும். விபத்து காப்பீட்டில் 17 முதல் 70 வயது வரை உடையவர்கள் தகுதியுடையவர்கள். ஆயுள் காப்பீட்டில் 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் தகுதியுடையவர்கள். இந்த திட்டங்களை வங்கி மற்றும் அஞ்சல் துறையின் மூலம் மட்டுமே தொடரும் முடியும். இந்த காப்பீட்டை பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் ஜீரோ பலன்ஸ் மூலம் வங்கி கணக்கு தொடங்கி அதன் மூலம் தொடரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

Categories

Tech |