பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவ கல்லூரியில் சேருவதற்காக மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவ படிப்பில் சேர வேண்டுமென்றால் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் இந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் பல வருடங்களாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த முறை அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்தவும், நீட் தேர்வுக்கான வினா வங்கி வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதற்காக திருவண்ணாமலை, சேலம், வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நீட் மாதிரி தேர்வு மற்றும் வினா வங்கி தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.