கருவேப்பிலை சாதம் தயார கருவேப்பிலை சாதம் தயார் செய்யும் முறை
தேவையான பொருட்கள் ;
■ அரிசி 2 கப்
■ கருவேப்பிலை ஒரு கப்
■ தேங்காய் துருவல் அரை கப்
■ கடலை பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
■ காய்ந்த கருவேப்பிலை 4
■ மிளகு ஒரு டீஸ்பூன்
■ பெருங்காயம் சிறு துண்டு
■ நெய் ஒரு டேபிள் ஸ்பூன்
■ தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
■கடுகு அரை டேபிள்ஸ்பூன்
■ முந்திரி பருப்பு 10
■ உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது அளவு தேவையான அளவு
செய்முறை;
■ அரிசியை வேகவைத்து குழையாமல் பார்த்து வடித்துக் கொள்ளவும்.
■ ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு பெருங்காயம் கருவேப்பிலை மிளகாய் ஆகியவற்றை சிவக்க வதக்கவும் பின்னர் அதில் மிளகு சேர்த்து சிறிது வறுத்து அதில் கறிவேப்பிலையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
■ பின் தேங்காய் துருவலைச் சேர்த்து சிறிது வாசகி இறக்கி வைக்கவும் ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் .
■ வாணலியில் நெய் விட்டு கடுகு சேர்க்கவும் கடுகு வெடித்தவுடன் முந்திரி பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும் ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி போடவும் பின் சாதத்தை போட்டு லேசாக கிளறவும் கருவேப்பிலை பொடி உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
இப்போது சுவையான கருவேப்பிலை சாதம் தயாராகிவிட்டது.