நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றார்.
இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது .இதற்கு முன் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் குவித்தது .இதன் பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 62 ரன்னில் சுருண்டது. இதன் பிறகு இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது .இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற 540 ரன்கள் தேவைப்பட்டது .இதில் நேற்று 3-ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.
இதனிடையே இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது .இறுதியாக நியூசிலாந்து அணி 167 ரன்னில் சுருண்டது .இதனால் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது . இதில் ஆட்ட நாயகனுக்கான விருது இந்திய அணியில் மயங்க் அகர்வாலுக்கும் ,தொடர் நாயகன் விருது அஸ்வினுக்கும் வழங்கப்பட்டது .இது அஸ்வினின் 9-வது தொடர் நாயகன் விருது ஆகும்.இதற்கு முன்பாக மார்ச் மாதம் இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தொடர்நாயகன் விருது வென்றிருந்தார் . இதன்மூலம் அதிக தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியல் அஸ்வின் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இப்பட்டியலில் முரளிதரன் 11 முறை தொடர் நாயகன் விருது வென்ற முதலிடத்திலும் அஸ்வின் மற்றும் காலிஸ் 9 முறை தொடர் நாயகன் விருது வென்று 2-வது மற்றும் 3-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.