தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 11 ஆம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் நாமக்கல் மாவட்ட அறிஞர் அண்ணா அரசு கல்லூரி நடைபெற உள்ளது. இந்த முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளனர். இதற்கு 5 முதல் 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரி பொறியியல், தையல் பயிற்சி மற்றும் நர்சிங் படித்து உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் நேர்காணலுக்கு வருபவர்கள் தங்களது சுய விவரம், கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகல் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு என்று என்னை தொடர்பு கொள்ளலாம்.