இந்திய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தொற்று பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு செலவு தொகை வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதற்கான செலவை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்று தெரிவித்திருந்தது. தொடக்கத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த இந்த திட்டம், தற்போது தொய்வு அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாக மருத்துவ செலவு அளிக்கும் முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதாவது: “சிகிச்சை பெற்றுக் கொண்டதை அடுத்து மருத்துவ செலவு கோரி காப்பீட்டு நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்து இருந்தோம். ஆனால் அரசிடம் இருந்து இதுவரை தங்களுக்கு எந்த நிதியும் வரவில்லை.
இதுகுறித்து கேட்டால் தாமதம் செய்து வருகின்றனர். இதனால் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளோம். இந்த விஷயத்தில் தமிழக அரசு விரைவாக செயல்பட்டு அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை அதிகப்படியான பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.
இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் தினமும் அலுவலகத்திற்கு வர வேண்டும் எனவும், பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.
மத்திய தேர்தல் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்டது. அதில் போதிய நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத பலர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை கிடைக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர் .சிகிச்சை முடிந்து வீடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதில்லை என்று தொடர் குற்றச்சாட்டி வருகின்றனர்.