Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல 5 பெண் குழந்தைகள்…. தாயின் விபரீத முடிவு…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!

5 பெண் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஜோரன் பகுதியில் உள்ள கலியாஹேதி கிராமத்தில் சிவ்லால் பன்ஜாரா என்பவர் வசித்து வருகிறார். இவர் கம்பளம் மற்றும் துணி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பத்மாதேவி என்ற மனைவியும், 7 பெண் குழந்தைகளும் இருந்தனர். இதனிடையில் சிவ்லாலுக்கும் அவரது மனைவி பத்மாதேவிக்கும் இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பக்கத்து கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெறவிருந்த இரங்கல் கூட்டத்தில் கலந்துகொள்ள சிவ்லால் சென்றுள்ளார்.

அப்போது பத்மாதேவி தனது மகள்களான சாவித்ரி, அன்காலி, காஜல், குஞ்சன் மற்றும் அர்ச்சனா ஆகிய 5 பேருடன் வீட்டிற்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் கிடந்த 6 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் காயத்ரி மற்றும் பூனம் ஆகிய 2 மகள்களும் உறங்கிக்கொண்டு இருந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சட்டப்பிரிவு 174-ன் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |