Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….  தமிழக அரசு செம சூப்பர் அறிவிப்பு…!!!

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் வெளியாகும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி அவற்றை உரிய முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். போதுமான இடம் இல்லாமல் இயங்கி வரும் 746 தனியார் பள்ளிகள் நிபுணர் குழு அறிவுரையின்படி தொடர்ந்து செயல்படலாம்,

இருப்பினும் இட வசதிக்கு ஏற்ப கூடுதல் மாணவர்களை உடனே வெளியேற்ற வேண்டும். இதுதவிர ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |