லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பொக்லைன் ஆப்பரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூன்றடைப்பு மேலூர் பகுதியில் பொக்லைன் ஆபரேட்டராக சந்திரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் விஜய்பால் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மூன்றடைப்பு நோக்கி புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்திரகுமாரின் மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
அதன்பின் படுகாயமடைந்த விஜயபாலை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்திர குமாரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.