சொந்த வீடு என்பது இன்றுவரை பலரின் வாழ்நாள் கனவாக உள்ளது. நகர்ப்புற மக்களின் மிகப்பெரிய கனவு என்றால் அது தங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்பதுதான். பெரும்பாலான மக்கள் வங்கி களில் கிடைக்கும் வீட்டு கடன்களை நம்பி தான் வீடு கட்டும் விஷயத்தில் அதிகம் இறங்குகின்றனர். ஆனால் இந்த வாய்ப்பை தகுதி மற்றும் வருமானம் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி மத்திய அரசு கொண்டுவந்துள்ள பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் ஏழை, எளியோர், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் சொந்த வீடு கனவு நிறைவேறும்.
சொந்த வீடு இல்லாதவர்களும், சேதமடைந்த வீடுகளில் அடிப்படை வசதிகூட இல்லாமல் வசிப்பவர்களுக்கு 25 சதுர மீட்டர் அளவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிப்போர் பலர் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலமாக வீடு பெற தகுதி பெறுபவர்கள் 3% வட்டியில் மானியத்துடன் 70,000 வரை கடன் பெற முடியும். அதிகபட்ச அசல் தொகை 2 லட்சம் மற்றும் அதற்கான அதிகபட்ச இஎம்ஐ தொகை ரூ.38,359 ஆகும்.
இந்தத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்பம், கூலி தொழில் செய்யும் நிலமற்ற குடும்பங்கள், ஆண் உறுப்பினர்கள் இல்லாத வீடுகள், வீட்டில் ஒருவர் கூட படிக்காத குடும்பங்கள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர் ஆகியோர் இந்தத் திட்டத்தின் மூலம் வீடு பெற தகுதியானவர்கள். இந்தத் திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி பார்க்கலாம்….
ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக், MGNREGA-பதிவு செய்யப்பட்ட வேலை அட்டை, ஸ்வச் பாரத் மிஷன் எண் ஆகிய ஆவணங்களை முறையாக பெற்றுக் கொண்டு https://pmaymis.gov.in/ அதிகாரப்பூர்வ பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கிராம சபை அதிகாரிகளால் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்படும் பட்டியல் வெளியிடப்படும். பெண் விண்ணப்பதாரர் என்றால் முன்னுரிமை வழங்கப்படும். அதே போல் மாநில அரசுகள் நடத்தும் பொதுச் சேவை மையத்தைப் பார்வையிட்டு விண்ணப்பப் படிவத்தை ஜிஎஸ்டி மற்றும் ரூ.25 கொடுத்து நிரப்பி சமர்பிக்கலாம்.