Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த விலங்குகள்…. சேதமான டேன்டீ அலுவலகம்…. அச்சத்தில் தொழிலாளர்கள்…!!

காட்டு யானைகள் டேன்டீ அலுவலகத்தை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கூடலூர் அருகில் இருக்கும் பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் காட்டு யானைகள் புகுந்து விட்டது. இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் வீடுகளுக்குள்ளேயே பதுங்கிவிட்டனர். இந்நிலையில் டேன்டீ அலுவலக கட்டிடத்தை முற்றுகையிட்ட காட்டுயானைகள் அதனை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

மேலும் அலுவலகத்தில் இருந்த கோப்புகளை துதிக்கையால் தூக்கி வெளியே வீசியுள்ளது அதன்பிறகு அதிகாலை நேரத்தில் காட்டு யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அந்த பகுதியில் காட்டு யானைகள் வர வாய்ப்புள்ளதால் தொழிலாளர்கள் அச்சத்துடன் வேலை பார்த்து வருகின்றனர். எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |