15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் கட்டபொம்மன் நகரில் கூலி தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு முருகேசன் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகேசனை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் முருகேசனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.