இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சுப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பசாமி என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து கருப்பசாமி அந்த இளம்பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் காடல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கருப்பசாமியை கைது செய்தனர்.