ராமயா பாண்டியன் முக்கிய நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர் தற்போது முக்கிய நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதன்படி, இவர் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கும் படத்தில் அவருடன் நடிக்க இருக்கிறார். இதனை அவர் தன் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.