மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா, அமெரிக்காவிலிருந்து வந்த இருவருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்கனவே 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர்.
மேலும் இதுவரை இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 பேருக்கும், கர்நாடகாவில் இரண்டு பேருக்கும், குஜராத் டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு என இந்தியா முழுவதும் 23 பேருக்கு ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.