Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த சிறுவன்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் ராஜ்முருகன் வசித்து வருகிறார். இவருக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் முத்து என்ற மகன் இருந்துள்ளான். அந்த சிறுவன் அப்பகுதியில் தனியார் நிலத்தில் இருந்த ராட்சத தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக முத்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இது குறித்து புதுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்கோட்டை காவல்துறையினர் முத்துவின் உடலை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பதிவு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |