நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது .இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது .இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய அணி வீரர்கள் அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் நியூசிலாந்து அணி வீரர்களான ரசின் ரவீந்திரா, அஜாஸ் படேல் ஆகிய இருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
இப்புகைப்படத்தில் உள்ள ஒற்றுமை யாதெனில் ஒருவரது பெயரின் இரண்டாம் பாதியில் மற்றொருவரின் பெயர் தொடங்குவதால் இவர்கள் 4 பேரும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது .இப்புகைப்படத்தை அஷ்வின் எடுக்க பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
In Sync!
How's that for a quartet! #INDvNZ #TeamIndia @Paytm pic.twitter.com/eKqDIIlx7m
— BCCI (@BCCI) December 6, 2021