டெல்லியில் ராணி ஜான்சி சாலையில்உள்ள தொழிலகத்தில் தீவிபத்து ஏற்பட்டதில் 43பேர் இறந்துள்ளனர் .50கும் மேற்பட்டோர் தீயணைப்பு துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளனர் .
தலைநகர் டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டியில் சந்தை பகுதி ஒன்று உள்ளது .அங்கு ஆறு அடுக்குமாடி கட்டிடத்தில் தொழிலகம் ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது .இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதே கட்டிடத்தில் தங்கியுள்ளனர் .இந்த ஆறு மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை ஐந்து மணிக்குமேல் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .இதையடுத்து 5.27மணியளவில் டெல்லி தீயணைப்பு துறைக்கு முதல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு துறையினர்பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் .தீவிபத்தின் போது அபாயக்குரல் எழுப்பியவர்கள், மயக்கநிலையில் இருந்தவர்கள் என 50க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினரால் காப்பாற்ற முடிந்தது .இந்த தீவிபத்தில் 43க்கும் மேற்பட்டோர் உடல் குறுகியும் மூச்சுத்திணறியும் உயிர் இழந்தனர் உயிர் இறந்தவர்களில் பலரும் துங்கிக்கொண்டிருந்த நிலையில் இறந்துள்ளதாக டெல்லி தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர் .சின்ன சின்ன தீக்காயங்களுடையவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.