மீன் பிடிக்க சென்ற வாலிபர் வீடு திரும்பாததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூளைபட்டு கிராமத்தில் கன்னியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியில் வசித்து வரும் சின்னராசு என்பவரும் ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். பின்னர் சின்னராசு வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால் கன்னியப்பன் வராததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சின்னராசுவிடம் விசாரித்துள்ளார். ஆனால் அவரை பற்றிய எந்த விவரமும் இவருக்கு தெரியவில்லை. இதனால் கண்ணியப்பனின் உறவினர்கள் தேசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கன்னியப்பனின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் தமிழ்நாடு மலைவாழ் பொதுச் செயலாளர் சரவணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்சம்பவ இடத்திற்குவிரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்படும் உறுதியளித்தனர். அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.