கொரோனா தடுப்பூசி முகாமில் 30,0000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 294 நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவ குழுக்கள் மூலமாக காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வீடு வீடாக சென்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் இம்மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாமில் 30,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.