Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அடடே! 1 ரூபாய் கூட பணம் செலுத்தாமல்…. ரூ.7 லட்சம் காப்பீடு பெறலாம்…. PF-இன் சிறப்பு திட்டம்…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சார்பாக ஊழியர்கள் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் டெபாசிட் இணைப்பு காப்பீட்டு திட்டம். இது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒரு காப்பீடு திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் பணம் எதுவும் செலுத்தாமல் அதிகபட்சமாக 7 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் கிடைக்கும். PF அமைப்போடு சேர்க்கப்பட்ட எந்த ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த சலுகை கட்டாயம் கிடைக்கும்.

அவருடைய இறப்பிற்கு பிறகு நாமினிக்கோ அல்லது குடும்ப உறுப்பினருக்கோ இந்த தொகையை முழுவதுமாக வழங்கப்படும். அவர் இறப்பதற்கு முன்பாக தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு  நிறுவனத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். வெவ்வேறு நிறுவனங்கள் ஆக கூட இருக்கலாம். இதற்கான தொகையை முழுவதுமாக நாமினிக்கோ அல்லது வாரிசுக்கு நேரடியாகவே அவருடைய வங்கிக் கணக்கிற்கு வழங்கப்படும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த திட்டத்தில் உதவி பெறுவதற்கு பிரீமியம் தொகையை அல்லது டெபாசிட் தொகையை ஏதும் செலுத்த வேண்டிய தேவையில்லை. இதில் குறைந்தபட்ச இன்சூரன்ஸ் பணம் 2.5 லட்சம் அதிகபட்ச இன்சுரன்ஸ் 7 லட்சம் ஆகும்.

Categories

Tech |