இதே போல்தான் சமீபத்தில் அமேசான் நிறுவனத்தின் ‘பிளாக் பிரைடே’ அதிரடி தள்ளுபடி விற்பனையின்போது அமெரிக்காவில் 300 பவுண்ட் (சுமார் ரூ.28 ஆயிரம்) மதிப்பிலான ஆடம்பர கைக்கெடிகாரம் ஓன்றை ஆர்டர் செய்தவர்களுக்கு ஆணுறை மற்றும் டூத் பிரஷ் போன்ற பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு பெரும்சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது அமேசான் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டது அமேசான் நிறுவனம் . அத்துடன் செலுத்திய மொத்த பணத்தை முழுவதுமாக திருப்பி தருவதாக கூறி உள்ளது அமேசான்.