2021-2022ஆம் வருடத்திற்கான மானிய கோரிக்கையின் போது கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவ மாணவியருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை ஊக்குவிக்கும் விதமாக விடுபட்டுள்ள 40 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் 10 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலன் சார்ந்து முந்தைய வருடங்களில் விடுபட்ட 40 கல்லூரி விடுதிகளில் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களை வழங்க 10 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.