Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்…. மனைவி கொடூர கொலை…. நாமக்கலில் பரபரப்பு….!!

கள்ளகாதலனுடன் பேசி கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த கணவன் மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள நவனி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். மரம் வெட்டும் தொழிலாளியான இவர் நந்தினி என்ற பெண்ணை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நந்திக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த தமிழ்ச்செல்வன் மனைவியை கண்டித்து வாலிபருடன் பேசுவதை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றபோது நந்தினி அந்த வாலிபருடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து நந்தினியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் நந்தினி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனைதொடர்ந்து தமிழ்செல்வனும் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதனையறிந்த புதுசத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாவட்ட சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ் மற்றும் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து வழக்குபதிவு செய்து புதுசத்திரம் காவல்துறையினர் தலைமறைவான தமிழ்செல்வனை தேடி வருகின்றனர்.

Categories

Tech |