நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தது. தற்போது தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்ததால் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கொரோனா தொற்று வருகிறது.
அதில் குறிப்பாக சிக்மகளூர் மாவட்டம் சீகோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 107 மாணவர்களுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர். மேலும் பள்ளியை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நிலமை மோசமாகிக்கொண்டே போகிறது.
அதனால் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்படும். மேலும் பள்ளிகள் அனைத்தையும் மீண்டும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு நிலை வந்தால் அதிலிருந்து அரசு பின்வாங்காது. மேலும் வல்லுனர்கள் பரிந்துரையின்படி, இப்போதைக்கு நேரடி வகுப்புகள் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிகிறது. அதனால் தேர்வுகள் நடத்தப்படும் போது சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்கள் அமர வைக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
மேலும் கொரோனா பாதிப்பு நிலவரத்தை 1 மணி நேரத்திற்கு ஒருமுறை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு அரசு தயாராக உள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசுகையில், பரவலானது குழந்தைகள் கல்வியை பாதிக்கும் என்று நினைத்து பெற்றோர்கள் பயப்பட தேவை இல்லை. நடப்பாண்டில் ஊரடங்கு முடிவுக்கு வந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
பாடத்திட்டங்கள் நடத்த தொடங்கி பள்ளிகளில் வழக்கமான சூழல் திரும்பிவிட்டது. மாணவர்களும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கி விட்டனர். மாணவர்களின் உடல் நலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மிகவும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் பள்ளி, கல்லூரிகளில் பின்பற்றப்படும் என்று உறுதி அளிக்கிறேன். ஆனால் மீண்டும் பள்ளிகளை மூடும் நிலை வந்தால் தான் பெரும் சிக்கலாகி விடும் என்று கூறியுள்ளார்.