மதுரையில் பிரியாணி சமைப்பதற்கக்காக 2 கிலோ வெங்காயம் திருடியவர் cctv கேமராவில் சிக்கி கைது செய்யபட்டர்…
கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெங்காயபதுக்கல்காரர்கள் வெங்காயத்தை தங்கள் விருப்பத்திற்கு எற்ப விலையை நிர்ணயம் செய்வதாக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், மதுரை கோமதிபுரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியின் உரிமையாளர் இல்லாத நேரத்தில், அரிசிக்கு 1500 ரூபாய் பணம் தரவேண்டும் என்று 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கேட்க கடை ஊழியரும் இதை பற்றி உரிமையாளரிடம் போனில் கேட்டபொது அரைகுறை தூக்கத்தில் இருந்த உரிமையாளரும் அரிசி வியாபாரி வந்திருப்பதாக நினைத்து பணத்தை கொடுத்துவிடுமாறு கூறியுள்ளார்.
உரிமையாளர் கடைக்கு வந்து பார்த்தவுடன் தான் பணம் வாங்கிச்சென்றது அரிசி வியாபாரி அல்ல என்பது தெரியவந்ததால், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த மர்ம நபர் மதிய வேளையில் ஆள் இல்லா நேரத்தை பயன்படுத்தி கடைக்குள் புகுந்து கடை ஊழியர் செல்போனில் பேசியபடியே கடைக்குள் அங்குமிங்கும் செல்வதை நோட்டமிட்டு, பிஸ்கட் பாக்கெட், 2 கிலோ வெங்காயம், பிரியாணி அரிசி பாக்கெட், என ஒவ்வொன்றாக திருடி பையில் போடுவதையும், பின்னர் கடையின் பெண் ஊழியரிடம் பேச்சுக்கொடுத்து 1500 ரூபாய் பணத்தை ஏமாற்றி பெற்றுகொண்டதை பார்த்து அதிர்ந்து போயினர்.
இதுதொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் உரிமையாளர் புகார் அளித்தார் . இதற்கிடையே அடுத்தடுத்த நாட்களின் சிசிடிவி காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்தபோது அந்த நபர் தொடர்ச்சியாக பல நாட்கள் வெங்காயம் மற்றும் பிரியாணி அரிசி திருட்டில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.
இதையடுத்து மீண்டும் , சனிக்கிழமை மாலையில் கூட்டம் அதிகமாக இருக்கும்நேரத்தில் கைவரிசை காட்டும் நோக்கத்துடன் கடைக்குள் நுழைந்த வெங்காய கொள்ளையனை கடையின் உரிமையாளர் மடக்கி பிடித்தார். விசாரணையில் அவர் கொன்றை வீதியை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பதும் பிரியாணி சமைப்பதற்காக அரிசியையும் வெங்காயத்தையும் திருடிச்சென்றதும் தெரியவந்தது.அப்துல்ரகுமானை பிடித்து கடைக்காரர் காவல் நிலையத்தில் ஓப்படைத்தனர்.இது தொடர்பாக அப்துல் ரகுமானின் உறவினர்கள் திருடிய வெங்காயம் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும், முழுமையாக பணம் கொடுத்து விடுவதாக கூறி சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஒரு பக்கம் திருடும் அளவுக்கு வெங்காயத்தின் மதிப்பு உயர்ந்துவிட்டது என்பதுதான் உண்மை , சமூக வலைதளைங்களில் புதிதாக திருமணம் செய்த மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசாக கொடுப்பது போலவும் பணத்திற்கு பதிலாக வெங்காயத்தை பயன்படுத்துவதுபோலவும் வெங்காயத்தை பெண்கள் தங்கள் ஆடம்பர அணிகலன்கலங்களாக பயன்படுத்தும் வீடியோக்கள் பல வெளியாகி வருகின்றது .