டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்த்தை தொடர்ந்து இந்தியளவில் ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது.
தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீ 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
அதோடு இல்லாமல் இந்த சோக சம்பவம் குறித்து சமூக வலைத்தளமான ட்வீட்_டரில் #DelhiFire என்ற ஹாஸ்டக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது.இதில் பல்வேறு தரப்பினர் தங்களின் அனுதாபங்களை பகிர்ந்து வருகின்றனர்.