நெதர்லாந்திலுள்ள ரமடா என்னும் விமான நிலைய ஹோட்டல் தற்போது ஓமிக்ரான் விடுதியாக மாறியுள்ளது.
நெதர்லாந்தில் ஸ்ஷிபோல் என்னும் விமானநிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகே ரமடா என்னும் ஹோட்டல் உள்ளது.
இந்த ரமடா ஹோட்டலில் தென்னாப்பிரிக்காவிலிருந்து நெதர்லாந்துக்கு 2 விமானத்தின் மூலம் வந்த பயணிகளின் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகையினால் இந்த ரமடா ஹோட்டல் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் விடுதியாக மாறியுள்ளது. இந்த ரமடா என்னும் விமான நிலைய ஹோட்டலை “கொரோனா ஹோட்டல்” என்று அப்பகுதியில் வண்டி ஓட்டும் ஒருவர் தெரிவித்துள்ளார்.