பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 நவீன விழிப்புணர்வு வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார். சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒலி ஒளி காட்சிகளை திரையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 2 காவல்துறை விழிப்புணர்வு வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
அனைத்து மாவட்டங்களிலும், பொதுமக்களுக்கும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் இந்த வாகனம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஊட்டம் தரும் காய்கறி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதன்படி 225 ரூபாய் மானிய விலையில் மாடித்தோட்ட காய்கறி செடிகளும், 15 ரூபாய்க்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஊட்டச்சத்து தடைகளையும் பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.