உலகத்தில் இருக்கக்கூடிய பலசாலி ஆண்களால் கூட செய்ய முடியாத டாஸ்க் ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தற்பொழுது tik.tok, ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சேர் சேலஞ்ச் என்ற ஹேஸ்டேக் வைரலாக பரவி வருகிறது. இந்த #ஹாஷ்டாக் சேலஞ்சை ஆண்கள் மேற்கொள்ள வேண்டும். அதாவது ஆண்கள் குனிந்து நாற்காலியை தங்களது மார்பு அல்லது வயிற்றுப் பகுதியுடன் ஒட்டி வைத்து பின் நிமிர வேண்டும். இதனை உலகில் இருக்கக்கூடிய பல்வேறு ஆண்களும் முயற்சி செய்தும் இதுவரை யாராலும் முடியவில்லை.
ஜிம்முக்கு சென்று நன்கு உடற்கட்டுடன் இருக்கக்கூடிய ஆண்களாலும் இந்த சேலஞ்சை முறியடிக்க முடியவில்லை. ஆனால் பெண்கள் இதனை மிக சுலபமாக செய்து முடித்து காட்டியுள்ளனர். இதற்கான அறிவியல் கூற்றாக இவ்வாறு கூறப்படுகிறது. அதில், ஆண்கள் இயற்கையிலேயே தங்களது மார்பு மற்றும் தோல் பகுதியில் மிகுந்த பலம் மிகுந்தவர்களாக இருப்பர்.
அதே போல் பெண்கள் இடுப்பு பகுதியில் பலம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஆண்கள் நாற்காலியை அவ்வாறு முட்டு கொடுக்கும் பொழுது அவர்களது தோள்பட்டை பலம் முழுவதும் இறங்கி அவர்களால் நாற்காலியை தூக்கியபடி நிமிர முடியாது. ஆனால் பெண்கள் இயற்கையிலேயே இடுப்பில் பல மிகுந்தவர்களாக காணப்படுவதால் அவர்களால் நாற்காலியை சுலபமாக தூக்கி விட முடியும். நீங்கள் வேண்டுமானால் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய நாற்காலியை இதேபோல் முயற்சி செய்து தூக்கி காண்பித்து என்ற #chairchallange என்ற ஹாஷ்டக்கில் போட்டு பகிர்ந்து பாருங்க. தூக்க முடிந்தால் நீங்கள் தான் இந்த உலகிலேயே மிகப்பெரிய ஆண் பலசாலி.