வங்கிகளுக்கான வட்டி வீதங்கள் உயராது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி உயராது. ரிசர்வ் வங்கியின் வட்டி வீதம் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க அதன் நாணயக் கொள்கை குழு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூடிய கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி 4% நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை மீண்டும் ரிசர்வ் வங்கி கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி உயராது. அதேநேரத்தில் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெரும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3.35 சதவீதத்திலிருந்து உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.