Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா தொடர் ….! வெளியானது புதிய போட்டி அட்டவணை….!!!

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான புதிய அட்டவணையை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமைக்ரான்’ என்ற புதிய வகை வைரஸ் பரவி வரும் நிலையில் இந்திய அணி ,தென்ஆப்பிரிக்கா பயணத்துக்கான தேதியில்  சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதோடு டி2-  தொடர் பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிக்கான புதிய அட்டவணையை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதியும் ,          2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ஆம் தேதி ஜோகன்ஸ்பர்க்கிலும் ,3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 11-ஆம் தேதி  கேப்டவுனிலும் நடைபெற உள்ளது .இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி ஜனவரி 19 ,21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது

Categories

Tech |