Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் ….! மீண்டும் சாதனை படைத்த அஸ்வின்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் உள்ளூரில் 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 300 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் .

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது .இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட் வீதம் கைப்பற்றினார். இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 427 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். இதில் 300 விக்கெட்டுகள் சொந்த மண்ணில் எடுத்தவை ஆகும் . இதன்மூலம் அஷ்வின் உள்ளூரில் 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 300 விக்கெட் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் இலங்கை வீரர் முரளிதரன் 493 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.

அடுத்ததாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 402 விக்கெட்டும், இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே 350 விக்கெட்டும்,  இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 341 விக்கெட் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்ன் 319 விக்கெட்டும் கைப்பற்றி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தற்போது இந்தப் பட்டியலில் அஸ்வின் 300 விக்கெட் கைப்பற்றி இணைந்துள்ளார். அதுமட்டுமில்லாது நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டும் அவர் 66 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் .இதன் மூலம் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Categories

Tech |