Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சீனியர் வீரர்கள் இடத்திற்கு ஆபத்து”….! சூசகமாக சொன்ன டிராவிட்….!!!

அணி வீரர்கள் தேர்வில் எங்களுக்கு தலைவலி காத்திருக்கிறது என இந்திய அணியின்  தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  கூறியுள்ளார் .

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.இந்நிலையில் இந்திய அணி வெற்றிக்கு பிறகு அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  நிருபர்களிடம் கூறும்போது, “டெஸ்ட் தொடரை வெற்றியுடன் முடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது .இதற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம் .அதேசமயம் இளம் வீரர்கள் அணியில் நன்றாக விளையாடுவதைப் பார்க்கும் போது இனி அணியில்  வீரர்களை தேர்ந்தெடுப்பதில்  எங்களுக்கு தலைவலி காத்திருக்கிறது .

இதனால் அணியில் நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை வரலாம். அதேசமயம் அணியிலிருந்து ஒரு வீரரை நீக்கும் போது அவர்  அணியிலிருந்து நீக்கப்படுகிறீர்கள் என்று தெளிவான தகவல் பரிமாற்றம் எங்களிடம் இருக்கும். அதனை வீரர்களிடமும் எடுத்து விளக்குவோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார் .இதன் மூலம் அணியின் சீனியர் வீரர்களான ரஹானே ,புஜாரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோரரின் இடத்திற்கு  ஆபத்து வந்துள்ளதை அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |