தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உலகமெங்கும் கணினி வழி தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்கும். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகின்றது. இதில் விருது பெறும் நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 31.12.2021
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர்
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.tamilvalachithurai.com
தொடர்புக்கான தொலைபேசி எண்கள் : சென்னை – 600 008 044 – 28190412 / 044 – 28190413.
மின்னஞ்சல் முகவரி: [email protected]” என தமிழக அரசு தெரிவித்துள்ளது