டெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்திற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியின் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் மக்களின் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளது. இதற்கிடையே, இன்று அதிகாலை பொழுதில் அப்பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்றனர். அதிகாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக இருந்த நிலையில்தற்போது தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.மேலும் பலர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில். தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லியில் அதிகாலையில் பொழுதில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் கொடூரமானது என்றும் விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தீ விபத்தில் காயமடைந்த வர்கள் விரைவாக குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என்றும்.அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என பதிவிட்டுள்ளார்.