நம் நாட்டில் ஒட்டு மொத்தமாக எத்தனை ஏடிஎம் மையங்கள் இருக்கின்றது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
நம் நாட்டில் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டுவாடா மையங்கள் செயல்பட்டு வருகின்றது. நேற்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் நம் நாட்டில் எத்தனை ஏடிஎம் மையங்கள் உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 2.13 லட்சம் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை கிராமம் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் கூடுதலாக எந்த வங்கியும் சாராமல் வெறும் ஏடிஎம் இயந்திரங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 27,837 இயந்திரங்கள் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.