Categories
மாநில செய்திகள்

1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு மேல் கிடையாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள நியாயவிலை கடைகள் தனியாக செயல்பட குழு அமைக்கப்பட்டு விரைவில் புதிய நியாயவிலைக் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய. விலை கடை திறந்து வைத்த அமைச்சர் சக்கரபாணி தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது: “தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி அங்காடிகள் முழுவதும் உணவுப் பொருட்களை எளிதாக பெற்றுக் கொள்கின்ற வகையில் தாய் அங்காடியிலிருந்து பிரித்து பகுதிநேர அங்காடிகள் ஏற்படுத்தப்பட்டு, மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் 3,86,215 குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தமாக 734 நியாயவிலைக்ககடைகள் செயல்பட்டு வருகின்றன.

எனவே தமிழகம் முழுவதும் ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் மேல் உள்ள நியாய விலைக் கடைகள் எவையென கண்டறிவதற்கு தனியாக செயற்குழு அமைக்கப்பட உள்ளது. இதன் மூலமாக விரைவில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடைகள் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தோர் 15 நாட்களில் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு 20 வகையான மளிகை பொருட்களுடன் முழு கரும்பு என 21 பொருள்கள் விரைவில் வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |