காட்டு யானைகள் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமுடி, ஹைபாரஸ்ட், தோணிமுடி, நல்லமுடி போன்ற எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த காட்டு யானைகள் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருப்பதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனைக்கு செல்வதற்கு வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர்.
வால்பாறையில் நிலவும் குளிருடன் கூடிய பனி மூட்டத்தை அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். ஆனால் நல்லமுடி காட்சிமுனை பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி செல்கின்றனர்.