Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு போக மாட்டியா…? இளம்பெண் மீது சரமாரியான தாக்குதல்…. விடுதி காப்பாளர் உள்பட இருவர் கைது…!!

பெண் தொழிலாளியை கம்பால் தாக்கிய குற்றத்திற்காக மில் மேலாளர் மற்றும் விடுதியின் காப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உடையாம்பாளையம் பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் தமிழகம் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான இளம்பெண்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த மில்லில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட இளம்பெண் வேலைக்கு செல்லாமல் விடுதியில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் விடுதியின் காப்பாளர் லதா மற்றும் மில் மேலாளர் முத்தையா ஆகிய இருவரும் இணைந்து இளம்பெண்ணை வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.

அதற்கு தனக்கு இன்னும் உடம்பு சரியாகவில்லை எனவும், குணமடைந்த பிறகு வேலைக்கு வருகிறேன் எனவும் இளம்பெண் கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த 2 பேரும் இளம்பெண்ணை கம்பால் சரமாரியாக அடித்துள்ளனர். அப்போது வலி தாங்க முடியாமல் இளம்பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்தையா மற்றும் லதா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |