Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி விபத்து…. மளமளவென பற்றி எரிந்த லாரி…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கடப்பா கல்லை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரள மாநிலத்திலுள்ள கோட்டயம் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கோவிந்தன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தின்னப்பள்ளி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பு சுவரின் மீது பலமாக மோதியது. இதனால் டீசல் டேங்கில் தீப்பிடித்து லாரி மளமளவென பற்றி எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவிந்தன் உடனடியாக லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த விபத்தில் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |