சித்தி மற்றும் தாத்தாவை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள இலுப்பநத்தம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தனது தாத்தாவான கலியனிடம் கூறியுள்ளார். அப்போது ஒழுங்காக வேலைக்கு சென்றால் திருமணம் செய்து வைக்கிறேன் என கலியன் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கண்ணன் கடந்த 2014-ஆம் ஆண்டு கலியன் தங்கியிருந்த குடிசைக்கு தீ வைத்துள்ளார்.
மேலும் கண்ணன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை தடுக்க முயன்ற சித்தியான கலா என்பவரையும் கண்ணன் கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வீரகனூர் காவல்துறையினர் கண்ணனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கண்ணனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.