அருப்புக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட கர்ப்பிணி பெண் உயிரிழந்ததுடன் அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை , வதுவார்பட்டி அருகே ஒரு பகுதியை சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான ஆனந்தாயி நேற்று புரோட்டா சாப்பிட்டதாக தெரிகிறது .சாப்பிட சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது வயிற்றில் இருந்த இரண்டு சிசுக்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் கட்டாயம் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம். ஏனெனில் தங்களுடன் சேர்ந்து தங்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளையும் பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு எதையும் சாப்பிட வேண்டும்.